search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈஸ்வரன் கோவில்"

    • தமிழகம் முழுதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • தூரம்பாடி கிராமத்தில் உள்ள குலமாணிக்க ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 168 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    வெள்ளகோவில்:

    தமிழகம் முழுதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி கோவில் நிலங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டு, கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் குமரத்துரை, வட்டாட்சியர் ஆலய நிலங்கள் ரவீந்திரன் மற்றும் வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் செயல் அலுவலர் எஸ்.ராமநாதன் மற்றும் சர்வேயர்கள் இணைந்து தூரம்பாடி கிராமத்தில் உள்ள குலமாணிக்க ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 168 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனுடைய தற்போதைய மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

    • ஜனவரி 27-ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • 48 நாட்களுக்கான மண்டல பூஜை நிறைவு விழா நடைபெறுகிறது.

    காங்கயம் :

    காங்கேயம் அருகே உள்ள பாப்பினி கிராமம் மட வளாகத்தில் பிரதான புகழ்பெற்ற ஸ்ரீ ப்ருஹன்நாயகி அம்பிகை சமேத ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரகுபதி நாராயண பெருமாள் திருக்கோவில்கள் உள்ளன. கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சமூகத்தின் தோடை, கண்ணந்தை காடை, கீரை, ஆகிய நான்கு குலத்தவர்களின் குலதெய்வமாக விளங்கி வரும் கோவில்களில் கடந்த ஜனவரி 27-ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து 48 நாட்களுக்கான மண்டல பூஜை ஜனவரி 28ஆம் தேதி முதல் தொடங்கி வரும் 16.3.23ம் தேதி அன்று 48 நாட்களுக்கான மண்டல பூஜை நிறைவு விழா நடைபெறுகிறது. அன்று அம்பிகை மற்றும் ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும் பெருமாள் ஆகிய தெய்வங்களுக்கு 48 நாள் மண்டலாபிஷேக சிறப்பு வழிபாடுகள் செய்து நிறைவு வழிபாடாக 108 சங்காபிஷேக பூஜைகளும், சிறப்பு யாக வழிபாடுகளும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில்களின் தலைவர் ஏ.வரதராஜ், நிர்வாக தலைவர் எஸ் தங்கமுத்து செயலாளர் எம் ராமசாமி,பொருளாளர்.பி அர்ச்சுணன்,பாப்பினி கோவில் தலைவர் .தம்பி வெங்கடாசலம் பால சமுத்திரம் புதூர் கே ஆர் பாலசுப்பிரமணியம் மற்றும் கோவில்களின் கொங்கு வேளாளர் தோடை கண்ணந்தை காடை மற்றும் கீரை குலத்தோர் சங்கத்தின் நிர்வாகிகளும் பாப்பினி வீரசோழபுரம் கிராம பொதுமக்களும் செய்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இஸ்லாமியர்களாகிய நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம்.
    • எங்கள் பண்டிகைகளுக்கு, நாங்கள் விருந்தோம்பி, ஒருவருக்கொருவர் 200 ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.

    கோவை:

    கோவையில் கடந்த 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தான். விசாரணையில் இது திட்டமிட்ட தாக்குதல் என்பது தெரியவந்தது. இதுகுறித்து மாநகர போலீசார் விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்தனர்.

    கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. ஜமாஅத் மற்றும் உலமாக்களை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஜமாஅத் நிர்வாகிகள், மதவாதத்தை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம். போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தவும், அமைதியை நிலைநாட்டும் வகையிலும் ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று கோட்டைமேடு பகுதியை சேர்ந்த பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல், கேரள சுன்னத் ஜமா அத் நிர்வாகிகள், கோவை மாவட்ட அனைத்து சுன்னத் ஜமா அத்தின் பொதுச்செயலாளர் இனாயத்துல்லா தலைமையில் 15 பேர் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றனர்.

    அவர்களை கோட்டை ஈஸ்வரன் கோவில் பூசாரிகள், கோவில் செயல் அலுவலர் உள்ளிட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்து கைகூப்பி வரவேற்றனர். பின்னர் அவர்களை கோவிலுக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு ஒரு அறையில் கோவில் நிர்வாகிகள், பூசாரிகள், ஜமாஅத் நிர்வாகிகள் ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடினர். அப்போது பழைய நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். தேநீர் குடித்த பிறகு ஜமாத் நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அவர்களை கோவில் நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.

    பின்னர் கோவை மாவட்ட அனைத்து சுன்னத் ஜமா அத் பொதுச் செயலாளர் இனாயத்துல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    3 ஜமா அத் நிர்வாகிகளும் மதநல்லிணக்க வருகையாக கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம்.

    கோவையில் சென்ற வாரம் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமும், பல்வேறு சமூகத்திற்கு இடையில் ஒரு பதட்டமான சூழ்நிலை உருவானதை நாம்அறிவோம்.

    இஸ்லாமியர்களாகிய நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இங்கு இருக்கக்கூடிய சங்கமேஸ்வரர் கோவில், இந்த தெருவில் அமைந்துள்ள மசூதி மற்றும் சுற்றுமுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு, அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருகிறோம்.

    எங்கள் பண்டிகைகளுக்கு, நாங்கள் விருந்தோம்பி, ஒருவருக்கொருவர் 200 ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.

    இந்த சூழ்நிலையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை கோட்டைமேட்டில் உள்ள ஜமாத் கண்டிக்கிறது. இஸ்லாம் ஒருபோதும் வன்முறையை தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். இங்கு வாழும் மக்கள் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து, சிறுபான்மை மக்கள் அனைவரோடும், பெரும்பான்மை மக்களோடும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையை விரும்புகிறோம்.

    ஆகவே இந்த வருகை மதநல்லிணக்கம் பேணுவதற்காக தான். இதை தொடர்ந்து கோவையில் எங்களது ஜமாத்துகள் ஒன்றிணைந்து பல்வேறு வர்த்தக ரீதியாகவும் மற்றும் அனைத்து மசூதிகளும், சிறுபான்மை, பெரும்பான்மை மக்களோடு இணைந்து நற்பணிகள் செய்வது சம்பந்தமாக திட்டமிட்டு செயலாற்ற உள்ளோம்.

    எந்தவிதமான மதபூசலுக்கும், எந்தவிதமான அரசியலுக்கு ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஆகவே உங்களோடு நாங்கள். எங்களோடு நீங்கள் என்ற தாரக மந்திரத்தை நாங்கள் முன்னெடுத்து இன்று சங்கேமஸ்வரர் கோவில் நிர்வாகிகளிடம் உரைத்தோம். அவர்களும் மகிழ்ச்சியோடு எங்களை வரவேற்று சால்வை அணிவித்து கவுரப்படுத்தினர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    அனைவரும் ஒன்றிணைந்து கோவையை தமிழகத்தில் மத அமைதி, மதநல்லிணக்கத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இடமாக மாற்றுவோம். எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடம் கொடுக்க மாட்டோம். எந்த வகையில் பயங்கரவாதம் வந்தாலும் நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவிலில் நடந்த கலந்துரையாடல் குறித்து கேட்டபோது இந்த தெருவில் விளையாடியது மற்றும் தேரோட்டம் நடத்தப்படும்போது அளித்த ஒத்துழைப்பு குறித்து நினைவு கூர்ந்தோம். இரு சமூகமும் இணைந்து மதநல்லிணக்கத்துடன் ஒற்றுமையை வலியுறுத்துவோம் என பேசினோம் என்றார்.

    • கூடலூரில் பழமையான ஈஸ்வரன் கோவிலை கையகப்படுத்த அறநிலையத்துறை நடவடிக்கை
    • இதனால் உள்ளூர் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூர் :

    தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து தாமரைக்குளம் செல்லும் வழியில் பழமையான ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலை 1446-ம் ஆண்டில் திருவனந்தபுரத்தை சேர்ந்த பூஞ்சாற்றுதம்புரான் என்ற மன்னன் கட்டியதாகவும், இக்கோவிலுக்கு மானிய மாக நிலங்களும், நீர்பாச–னத்திற்காக தாமரை–க்குளத்தையும் வழங்கியதாக கூறப்படுகிறது.

    கடந்த பல ஆண்டுகளாக கோவில் பராமரிப்பின்றி இருந்ததால் கோபுரம் மற்றும் கட்டிடங்கள் சிதிலமடைந்து வந்தன. எனவே கோவிலை புனரமைத்து பக்தர்கள் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என இந்துமுன்னணியினர் தமிழக இந்துசமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இந்து சமய அறநிலை-யத்துறை இணைஇயக்கு–னர் கலையழகன் உத்தரவி–ன்பேரில் தியாகராஜன் மற்றும் கூடலூர் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் ஆகியோர் ஈஸ்வரன் கோவிலுக்கு வந்து பார்வையிட்டனர்.

    இதனைதொடர்ந்து இந்த கோவிலை இந்து சமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் அதனை ஒரு வாரத்திற்குள் மனுவாக அளிக்கலாம் என்று நகரின் முக்கிய இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. –இதனால் உள்ளூர் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு வார த்தில் தகுந்தகாரண ங்களுடன்யாரும் ஆட்சே பணை தெரிவிக்கா விட்டால் இந்த கோவிலை இந்துசமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் தற்போது தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. அவையும் இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×